வன்முறையை ஆதரிக்கவில்லை!| Dinamalar

வன்முறையை ஆதரிக்கவில்லை!

Added : ஜூலை 11, 2018
Advertisement
வன்முறையை ஆதரிக்கவில்லை!

ஜார்க்கண்டில், மாட்டிறைச்சி வியாபாரி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை, மாலை அணிவித்து வரவேற்றதாக, எனக்கு எதிராக புகார் கூறப்படுகிறது. இதுபோன்ற வன்முறையை நான் ஆதரிப்பதாக, அனைவரும் கருதுகின்றனர்; இதற்காக, வருத்தம் தெரிவிக்கிறேன்.
ஜெயந்த் சின்ஹா, விமான போக்குவரத்து இணை அமைச்சர், பா.ஜ.,
பழிவாங்கும் செயல்!
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில், முதல் தகவல் அறிக்கையில், என் பெயர் இடம் பெறவில்லை. ஆனால், என்னை பழிவாங்கும் வகையில், அமலாக்கத்துறை செயல்படுகிறது. நீதிமன்றத்தில், என் மீதான புகார்களுக்கு உரிய பதில் அளிப்பேன்.
ப.சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,
அதிகாரிகளின் கடமை!
நாட்டுக்கு பணியாற்ற, மத்திய அரசு பணிகளில் அதிக வாய்ப்புகள் உள்ளன; இதை பயன்படுத்தி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வது, அதிகாரிகளின் கடமை. மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்துடன், அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.
ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி

Advertisement