பலாத்கார புகார்: பாதிரியார்கள் விரைவில் கைது?| Dinamalar

பலாத்கார புகார்: பாதிரியார்கள் விரைவில் கைது?

Added : ஜூலை 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில், பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய, மூன்று பாதிரியார்களின் முன் ஜாமின் மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச்சில், கேரளாவைச் சேர்ந்த நான்கு பேரும், டில்லியைச் சேர்ந்த ஒருவரும், பாதிரியார்களாக உள்ளனர்.
பாவ மன்னிப்பு : இந்நிலையில், கோட்டயம் மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த ஒருவர், சர்ச் நிர்வாகத்துக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது:என் மனைவியை, திருமணத்துக்கு முன், பாதிரியார் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின், இதற்காக மற்றொரு பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த பாதிரியார், மேலும் மூன்று பாதிரியார்களிடம், இது பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து, நான்கு பாதிரியார்களும், என் மனைவியை மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, நான்கு பாதிரியார்களையும், விடுமுறையில் செல்லும்படி, சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டது. பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியானதையடுத்து, பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் கணவர், போலீசில் புகார் செய்தார். நான்கு பாதிரியார்கள் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
முன் ஜாமின் கிடையாது : வழக்கு பதிவு செய்யப்பட்ட நான்கு பாதிரியார்களில் இருவர், முன் ஜாமின் கேட்டு, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுக்களை தள்ளுபடி செய்து, நீதிபதிபிறப்பித்த உத்தரவு:பாதிரியார்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு, முகாந்திரம் உள்ளது. எனவே, இவர்களுக்கு முன் ஜாமின் வழங்க முடியாது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சம்பந்தபட்ட பாதிரியார்கள், எந்த நேரத்திலும் கைது செய்யப் படலாம் என, தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையங்களில், 'உஷார்' : கேரளாவைச் சேர்ந்த ஆசிரியை, பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள, கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான பள்ளியில் பணியாற்றி வருகிறார்.ரோமன் கத்தோலிக்க டயோசிஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பள்ளி, பாதிரியார், பிரான்கோ முலக்கல் தலைமையில் செயல்பட்டு வருகிறது.பாதிரியார் முலக்கல், 2014ல், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலங்காட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில், தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாகவும், அதன் பின், 13 முறை பலாத்காரம் செய்ததாகவும், அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை, கோட்டயம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, பாதிரியார் முலக்கல், வெளிநாடுக்கு தப்பியோட திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியானது. இதையடுத்து, கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை