வேட்பாளர் சொத்து ஆவணங்கள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வேட்பாளர் சொத்து ஆவணங்கள் ஆய்வு

Added : ஜூலை 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: வேட்பு மனுவுடன், வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் சொத்து ஆவணங்களை ஆய்வு செய்ய, சி.பி.டி.டி., எனப்படும், மத்திய நேரடி வரி வாரியத்தின் உதவியை கேட்டு, தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுவுடன், தங்களின் சொத்து ஆவணங்கள், வரி செலுத்திய விபரங்கள் உட்பட பல ஆவணங்களை தாக்கல் செய்கின்றனர். சொத்து ஆவணங்களில், வேட்பாளர்கள் முறைகேடு செய்வதாக புகார்கள் வருகின்றன.இதையடுத்து, இந்த சொத்து ஆவணங்களை ஆய்வு செய்வதில், உதவி செய்யும்படி கோரி, சி.பி.டி.டி.,க்கு, தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:வேட்பாளர்கள், வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் சொத்து ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்வதில், ஒரே விதமான நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்.முந்தைய தேர்தலில் தாக்கல் செய்த சொத்து ஆவணங்களுடன், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களுக்கும், அதிக அளவில் வேறுபாடு இருந்தால், அதை ஆய்வு செய்ய வேண்டும்.ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல், சொத்துகளை வாங்க அல்லது விற்கப்பட்டு இருந்தால், அது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்த தகவல்களை, தேர்தல் ஆணையத்திடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X