ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு மாநில அரசு, 'நோட்டீஸ்'| Dinamalar

ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு மாநில அரசு, 'நோட்டீஸ்'

Added : ஜூலை 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்த, ஐ.ஏ.எஸ்., உயரதிகாரிக்கு, ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.கடந்த, 2010ல் நடந்த, சிவில் சர்வீஸ் தேர்வில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த, ஷா பெஸல், முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றார்; தற்போது, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில், உயர் படிப்புக்காக விடுப்பில் சென்றுள்ளார்.ஏப்ரல் மாதம், குஜராத்தில், 46 வயது தாயை, மகன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், பத்திரிகைகளில் வெளியானது. இதுபற்றி, டுவிட்டரில், ஷா பெஸல் கருத்து தெரிவித்திருந்தார்.இந்நிலையில், பாலியல் பலாத்காரம் பற்றிய பதிவுக்கு விளக்கம் கேட்டு, ஷா பெஸலுக்கு, ஜம்மு - காஷ்மீர் மாநில அரசின் பொது நிர்வாக துறையிடம் இருந்து, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.அந்த நோட்டீசில், 'உங்கள் பதவிக்கான கண்ணியத்தையும், நேர்மையையும் கடைபிடிக்க தவறி விட்டீர்கள். இது தொடர்பாக, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்; தவறினால், விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டுவிட்டரில், ஷா பெஸல் கூறுகையில், 'வெள்ளையர் காலத்து ஆதிக்க விதிகள், ஜனநாயக இந்தியாவில் பின்பற்றப்படுவது வருத்தமாக உள்ளது; இந்த விதிகள் மாற்றப்பட வேண்டும்' என, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை