ராமாயண மாதம் கொண்டாடகேரள மாநில அரசு முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராமாயண மாதம் கொண்டாடகேரள மாநில அரசு முடிவு

Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில், இந்த ஆண்டு முதல், ராமாயண மாதம் கொண்டாட, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும், 17 முதல், மலையாள காலண்டரின் கடைசி மாதமான, 'கார்கீடகம்' மாதம் துவங்குகிறது.இந்த மாதத்தில், ஹிந்துக்களின் வீடுகளில், மழையால் ஏற்படும் நோய்களில் இருந்து விடுபட, தினமும் வீடு மற்றும் கோவில்களில், ராமாயண கதைகள் கூறப்படுவது வழக்கம்.இதையடுத்து, வரும், 15 முதல், ஆக., 15 வரை, ராமாயண மாதமாக கொண்டாட, மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த காலத்தில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சமஸ்கிருத சங்கம் மூலம், ராமாயண சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர் சிவதாசன் கூறியதாவது:ராமாயண மாதம் கொண்டாடுவதற்கும், இடதுசாரி கட்சிகளின் கொள்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை; இதை வைத்து, சர்ச்சை ஏற்படுத்த வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
12-ஜூலை-201806:53:36 IST Report Abuse
Loganathan Kuttuva இதையே பாரதிய ஜனதா அரசு செய்திருந்தால் எதிர்ப்பு கிளம்பி விடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X