பான், குட்கா பறிமுதல் : ராமநாதபுரம் ஆசாமிகள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பான், குட்கா பறிமுதல் : ராமநாதபுரம் ஆசாமிகள் கைது

Added : ஜூலை 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அண்ணா சாலை: விற்பனைக்காக, வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பான், குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர். சென்னை, அண்ணா சாலை காவல் எல்லைக்கு உட்பட்ட குருசாமி தெருவில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக தெரிந்த ஒருவரது வீட்டில், திடீரென சோதனை செய்தனர். இதில் அங்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தடை செய்யப்பட்ட பான், குட்கா பொருட்கள், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, விற்பனையில் ஈடுபட்டு வந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த, அப்துல் மாலிக், 33, முகமது அன்வர், 32, ஆகிய இருவரையும், கைது செய்த போலீசார், போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக, குமரேசன் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை