ஏ.டி.எம்., கார்டு மோசடி : தேடப்பட்ட நபர் கைது| Dinamalar

ஏ.டி.எம்., கார்டு மோசடி : தேடப்பட்ட நபர் கைது

Added : ஜூலை 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஏ.டி.எம்., கார்டு மோசடி : தேடப்பட்ட நபர் கைது

புதுச்சேரி: போலி, ஏ.டி.எம்., கார்டு மோசடி வழக்கில், முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த சந்துருஜி, 29, என்பவரை, 80 நாட்களுக்கு பின், புதுச்சேரி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில் போலி, ஏ.டி.எம்., கார்டுகள் மூலம், வங்கி வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கான ரூபாய் திருடப்பட்டது. இவ்வழக்கில், புதுச்சேரி பல்கலை ஊழியர் பாலாஜி, 26, டாக்டர் விவேக் உள்ளிட்ட, 11 பேரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.முக்கிய குற்றவாளியாக கருதப்படும், அ.தி.மு.க., பிரமுகர் சந்துருஜியை, சி.பி.சி.ஐ.டி., தனிப்படை, இரண்டு மாதங்களாக தேடி வந்தது. அவர், தலைமறைவாக இருந்து வந்தார்.அவரது முன்ஜாமின் மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சந்துருஜிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கக் கோரி, அரசு சார்பில், கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், 80 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சந்துருஜியை, புதுச்சேரி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று, சென்னையில் முக்கிய பிரமுகர் ஒருவரை சந்திக்க சென்ற சந்துருஜி, போலீசிடம் சிக்கியுள்ளார். அவரை, புதுச்சேரி அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை