ராஜிவ் கொலையாளிகள் விடுதலை; ராகுலிடம் ரஞ்சித் வலியுறுத்தல் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :

முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தொடர்பாக, காலா பட இயக்குனர் ரஞ்சித், காங்கிரஸ் தலைவர் ராகுலை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

ராஜிவ் கொலையாளி,விடுதலை,ராகுல்,ரஞ்சித்,வலியுறுத்தல்


மெட்ராஸ், கபாலி, காலா படங்களின் இயக்குனர் ரஞ்சித், கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் முகாமிட்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன், டில்லி வந்த அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் அழைப்பு விடுத்ததை அடுத்து, அவரை நேரில் சந்தித்தார்.

இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பின்போது, இருவரும், தமிழக மற்றும் தேசிய அரசியல் நிலவரம் குறித்து பேசினர். இந்த சந்திப்பு, மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.


சந்திப்பு முடிந்து, ரஞ்சித், சென்னை திரும்பி விட்டாலும், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், ராகுல் அலுவலகம், நேற்று, இந்த சந்திப்பு குறித்து, புகைப்படம் மற்றும் விரிவான தகவல்களை வெளியிட்டது. இதன்பின் தான், இதுபற்றிய விபரம், அனைவருக்கும் தெரிந்தது.

இதுகுறித்து, சமூக வலைதளமான, டுவிட்டரில், ரஞ்சித் கூறியுள்ளதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், சிறையில்

Advertisement

தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் உட்பட ஏழு பேரது விடுதலை குறித்து, ராகுலிடம் பேசினேன். அதற்கு அவர், அவர்களது விடுதலையில் தனக்கு ஆட்சேபனை இல்லை என, என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)