ஏழைகளுக்கு உதவுவதே சிறந்த தொண்டு: ரஜினி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஏழைகளுக்கு உதவுவதே
சிறந்த தொண்டு: ரஜினி

சென்னை : ''காசிக்கு சென்று இறைவனை காண்பதை விட, ஏழைகளுக்கு உதவுவதே இறை தொண்டு,'' என, நடிகர் ரஜினி பேசினார்.

ஏழைகளுக்கு,உதவுவதே,சிறந்த தொண்டு,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்


வெளிநாட்டு பல்கலையில், டாக்டர் பட்டம் பெற்ற, புதிய நீதிக்கட்சி தலைவர், ஏ.சி.சண்முகத்திற்கு, சென்னையில், தனியார் அமைப்பு சார்பில், நேற்று பாராட்டு விழா நடந்தது.

இதில், நடிகர் ரஜினி பேசியதாவது: ஏ.சி.சண்முகத்தை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். அவர், பல கல்வி நிறுவனங்களை நடத்தி, அதன் வழியாக, நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார். எப்போதும் அவர் டென்ஷன் இல்லாமல், புத்துணர்ச்சியோடு இருக்கிறார். அவரது முடி கூட, அப்படித்தான் இருக்கிறது.

பரமஹம்சர் ஒரு நாள் காசிக்கு செல்ல நினைத்து, சேர்த்து வைத்த பணத்தோடு புறப்பட்டார். போகும் வழியில், சில ஏழைகளை கண்டார். வைத்திருந்த பணத்தை, அவர்களுக்கே செலவு செய்தார். அதன் வழியாக, அவர்கள் முகத்தில் இறைவனை கண்டு, காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டதாக கூறினார். ஏழைகளுக்கு உதவி செய்வது தான் இறை தொண்டு.

Advertisement

உழைப்பு, முயற்சியால் மட்டுமே எல்லாரும் வெற்றி பெற முடியாது. ஆண்டவன் அருள் வேண்டும். நமக்கு நல்ல எண்ணம் வேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும். மனம் போகும் போக்கில் போகக்கூடாது. நம் உடலை சுத்தமாக வைத்து கொண்டால், மனமும் சுத்தமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal Thiyagarajan - Chennai,இந்தியா
13-ஜூலை-201809:52:04 IST Report Abuse

Gopal Thiyagarajanஎந்த ஏழைக்கு இவர் உதவியிருக்கிறார்? தமிழக மக்களே, இனியும் ரஜினியை நம்ப வேண்டாம்.

Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
12-ஜூலை-201820:54:28 IST Report Abuse

Vaithilingam Ahilathirunayagamஇப்படியான தொண்டு செய்ய, அரசியலுக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. நாற்பது வருடங்களுக்கு முன்பே இப்படியான புண்ணிய காரியங்களைச் செய்திருந்தால் மக்கள் போற்றியிருப்பார்கள். ஆனால், தவறுகளே செய்தீர்கள்.

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
12-ஜூலை-201819:59:44 IST Report Abuse

தமிழ் மைந்தன்நீங்க முதலில் சந்தித்து ஆசி வாங்கிய அரசியல் குரு மாதிரி ஏழைகளுக்கு உதவி விடாதீர்கள்

Rate this:
மேலும் 80 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)