லோக்சபா தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம்: தமிழிசை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

லோக்சபா தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம்: தமிழிசை

Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
லோக்சபா தேர்தல் பணிகளை  துவக்கி விட்டோம்: தமிழிசை

சென்னை: ''தமிழகத்தில், தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம்,'' என, பா.ஜ., மாநிலத் தலைவர், தமிழிசை தெரிவித்தார்.
சென்னையில், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழ் மொழியில், 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். தமிழில் நுழைவுத்தேர்வு எழுத, பா.ஜ., அரசு ஏற்பாடு செய்தது. அதிகாரிகள் சிலரின் தவறால், தமிழ் வழி நீட் தேர்வில் சில தவறுகள் நடந்துள்ளன. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது.'மாணவர்கள் பாதிக்கப்படாமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தினேன்.அவர்கள் நீதிமன்ற உத்தரவு, முழுமையாக கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.பா.ஜ., தலைவர்கள் யாரும் ஊழல் வழக்கில், சிறைக்கு செல்லவில்லை. மற்ற தலைவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.தமிழகத்திற்கு வரும் தலைவரை, 'திரும்பி போங்கள்' எனக்கூறுவது விருந்தோம்பலா... நாங்கள் தரம் தாழ்ந்த அரசியலில், ஈடுபட மாட்டோம்.தமிழகத்தில், 50 ஆண்டுகளாக நேர்மையான நிர்வாகம் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.நேர்மையான நிர்வாகம் வேண்டும். லோக்சபா தேர்தலுக்காக, ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். தேர்தல் பணிகளை, நாங்கள் துவக்கி விட்டோம்.இவ்வாறு அவர்

கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
13-ஜூலை-201806:38:54 IST Report Abuse
Kasimani Baskaran திராவிட மத அடிமைகளை மிஞ்சி வெற்றி பெற முடியும் என்று நம்பவில்லை... ஆனால் இந்து விரோத கொள்கைகளால் திமுக மண்ணைக்கவ்வ அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை மட்டும் தெளிவாக சொல்ல முடியும்...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
14-ஜூலை-201806:38:55 IST Report Abuse
Anandanஅடிமைத்தனத்தில் பக்தர்களை மிஞ்ச முடியாது. என்ன சொன்னாலும் அடிமைகள் ஆத்தா கட்சிக்கும் அடிமை. பக்தாள் ஆட்களுக்கு கூவுறாங்க சிலை காணாப்போனா அடக்கி வாசிக்கிறாங்க கேட்டால் ஹிந்துக்கலாம், என்னங்கடா பித்தலாட்டம் இது?...
Rate this:
Share this comment
Cancel
Arumugam Palani - SALEM,இந்தியா
13-ஜூலை-201806:37:44 IST Report Abuse
Arumugam Palani ஏம்மா ..முதல்ல உங்க கட்சியின் வேட்பாளர்களை ஏற்பாடு செய்யுங்க பார்க்கலாம் ..5 பேர் நிப்பாங்க ,டெபாசிட் போயுடும்..அதற்கு வீம்பு பேசுறதை நிறுத்தி, மறைமுகமாக மிரட்டி பத்து-இருபது சீட்டுகளை அண்ணா திமுகாவிடம் வாங்கி அப்புறமா சவடால் பேச்சுகளை கொட்டுங்கள் ..சும்மா கிகிசுகிச்சு மூட்டாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
12-ஜூலை-201817:47:26 IST Report Abuse
மணிமாறன் Evm எல்லாம் தூசு தட்டி ரெடி பண்ணியாச்சு...அதைத்தான் தேர்தல் பணி என்று சொல்லுகிறார்...
Rate this:
Share this comment
MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ
13-ஜூலை-201800:17:05 IST Report Abuse
MALIKஆடத்தெரியாதவன் கூடம் கோணல் என்றானாம். அப்படித்தான் இருக்கு உங்க கருத்து. இந்தியாவே வெறும் தமிழகம் என்று எண்ணுகிறீர்களா? எந்த காரணத்துக்கான தமிழகத்தில் நீங்க பா ஜா கா வை எதிர்க்கிறீர்களோ, அதே காரணத்துக்காக ஆதரிப்பவர்கள் இந்தியாவில் அதிகம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை