லோக்சபா தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம்: தமிழிசை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

லோக்சபா தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம்: தமிழிசை

Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (14)
Advertisement
லோக்சபா தேர்தல் பணிகளை  துவக்கி விட்டோம்: தமிழிசை

சென்னை: ''தமிழகத்தில், தேர்தல் பணிகளை துவக்கி விட்டோம்,'' என, பா.ஜ., மாநிலத் தலைவர், தமிழிசை தெரிவித்தார்.
சென்னையில், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழ் மொழியில், 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். தமிழில் நுழைவுத்தேர்வு எழுத, பா.ஜ., அரசு ஏற்பாடு செய்தது. அதிகாரிகள் சிலரின் தவறால், தமிழ் வழி நீட் தேர்வில் சில தவறுகள் நடந்துள்ளன. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது.'மாணவர்கள் பாதிக்கப்படாமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தினேன்.அவர்கள் நீதிமன்ற உத்தரவு, முழுமையாக கிடைத்ததும், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.பா.ஜ., தலைவர்கள் யாரும் ஊழல் வழக்கில், சிறைக்கு செல்லவில்லை. மற்ற தலைவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.தமிழகத்திற்கு வரும் தலைவரை, 'திரும்பி போங்கள்' எனக்கூறுவது விருந்தோம்பலா... நாங்கள் தரம் தாழ்ந்த அரசியலில், ஈடுபட மாட்டோம்.தமிழகத்தில், 50 ஆண்டுகளாக நேர்மையான நிர்வாகம் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.நேர்மையான நிர்வாகம் வேண்டும். லோக்சபா தேர்தலுக்காக, ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். தேர்தல் பணிகளை, நாங்கள் துவக்கி விட்டோம்.இவ்வாறு அவர்

கூறினார்.

Advertisement