களையெடுப்பு: நிர்வாகிகள் கலக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

களையெடுப்பு: நிர்வாகிகள் கலக்கம்

Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தி.மு.க.,வில், அமைப்பு செயலர், துணைப் பொதுச்செயலராக உள்ள பலர் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதால், மாநில நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.அடுத்தாண்டு, மே மாதம், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில், தி.மு.க.,வில் களையெடுப்பு பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. மாவட்ட செயலர்கள், நகர செயலர்கள், ஒன்றிய செயலர்கள் மாவட்ட வாரியாக மாற்றப்பட்டு வருகின்றனர். கட்சியினரிடம் புகார் பெற்ற ஸ்டாலின், அதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளார். அதில், குற்றச்சாட்டு உறுதியானோரின் பதவிகளை பறிக்கும் நடவடிக்கையை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.'தி.மு.க., துணைப்பொதுச் செயலர்கள், வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலர் ஆலந்துார் பாரதி போன்றோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, கட்சியில் வேகமாக செயல்படக்கூடிய புதிய முகங்கள் நியமிக்கப்படுவர்' என்ற கருத்து, கட்சியினர் மத்தியில் நிலவுகிறது.

'லண்டன் சென்றுள்ள ஸ்டாலின், சென்னை திரும்பியதும், மாநில நிர்வாகிகள் மாற்றம் நிகழ்வது உறுதி' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ksrinivasan Kbalaji - BANGALORE,இந்தியா
12-ஜூலை-201810:32:22 IST Report Abuse
Ksrinivasan Kbalaji களை எடுக்கப்படவேண்டியது திமுக கட்சியையே. ஹிந்து விரோத கும்பல் குடும்ப கொள்ளை அரசியல் இனி வேண்டாம். சுய மரியாதை உள்ள ஹிந்துக்கள் திமுகவை நிராகரிப்பர்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஜூலை-201808:56:33 IST Report Abuse
Srinivasan Kannaiya களையெடுப்பு: நிர்வாகிகள் கலக்கம்...என்னடா இனிமே சம்பாரிக்க முடியாதே என்ற கலக்கமா...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜூலை-201807:02:35 IST Report Abuse
Bhaskaran அம்மூவரும் பழம்பெருச்சாளிகள் அவ்வளவுஎளிதில் அவர்களை நீக்கிவிடமுடியாது பாரதியாவது நீண்டநாட்களாக ஒரேகட்சியில் இருக்கிறார் மற்ற இருவரும் அதிமுக தயாரிப்புகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X