களையெடுப்பு: நிர்வாகிகள் கலக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

களையெடுப்பு: நிர்வாகிகள் கலக்கம்

Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement

தி.மு.க.,வில், அமைப்பு செயலர், துணைப் பொதுச்செயலராக உள்ள பலர் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதால், மாநில நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.அடுத்தாண்டு, மே மாதம், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில், தி.மு.க.,வில் களையெடுப்பு பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. மாவட்ட செயலர்கள், நகர செயலர்கள், ஒன்றிய செயலர்கள் மாவட்ட வாரியாக மாற்றப்பட்டு வருகின்றனர். கட்சியினரிடம் புகார் பெற்ற ஸ்டாலின், அதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளார். அதில், குற்றச்சாட்டு உறுதியானோரின் பதவிகளை பறிக்கும் நடவடிக்கையை, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.'தி.மு.க., துணைப்பொதுச் செயலர்கள், வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலர் ஆலந்துார் பாரதி போன்றோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, கட்சியில் வேகமாக செயல்படக்கூடிய புதிய முகங்கள் நியமிக்கப்படுவர்' என்ற கருத்து, கட்சியினர் மத்தியில் நிலவுகிறது.

'லண்டன் சென்றுள்ள ஸ்டாலின், சென்னை திரும்பியதும், மாநில நிர்வாகிகள் மாற்றம் நிகழ்வது உறுதி' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -

Advertisement