தனுஷ்கோடி ரயில் தடத்தில் சுற்றுலா சாலை: அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடி ரயில் தடத்தில் சுற்றுலா சாலை: அதிகாரிகள் ஆய்வு

Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 தனுஷ்கோடி ரயில் தடத்தில் சுற்றுலா சாலை: அதிகாரிகள் ஆய்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன், தனுஷ்கோடி ரயில்வே வழித்தடத்தில் சுற்றுலா சாலை அமைக்கரயில்வே, வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.1914ல் பாம்பன் கடலில் ரயில் போக்குவரத்து துவங்கியதும் மதுரை, சென்னையில் இருந்து தனுஷ்கோடி சென்ற ரயிலில் இந்திய, வெளிநாடு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பயணித்தனர். 1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலில் ரயில்வே ஸ்டேஷன், சர்ச், விநாயகர் கோயில் உள்ளிட்ட கட்டடங்கள் உருக்குலைந்தன. அன்று முதல் தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.பல ஆண்டுகளாக இங்கு சாலை அமைக்கப்படவில்லை. மத்திய அரசின் முயற்சியால் 53 கோடி ரூபாயில் சில ஆண்டுக்கு முன் தனுஷ்கோடிக்கு புதிய சாலை அமைக்கப்பட்டது.தற்போது பாம்பனில் இருந்து மன்னார் கடலோரத்தில் தனுஷ்கோடிக்கு சென்ற ரயில்வே வழித் தடத்தில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
54 ஆண்டுக்கு பின் : ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனம், மீன்கள் லாரிகள் வருகை அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க பாம்பன் முதல் தனுஷ்கோடி புதுரோடு வரை 12 கி.மீ., க்கு 10 மீட்டர் அகல சுற்றுலா சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, அழிந்து போன ரயில்வே வழித்தடத்தை வழங்குமாறு ரயில்வே நிர்வாகத்திற்கு மாநில அரசு கடிதம் அனுப்பியது.இதன்படி நேற்று பாம்பன் - தனுஷ்கோடி புதுரோடு ரயில்வே வழித்தடத்தை மதுரை ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் மனோகர், தாசில்தார் சந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சித்ரா, சுற்றுலா அலுவலர் மருதுபாண்டி ஆய்வு செய்தனர்.
இவ்வழித்தடம் குறித்து சுற்றுலா ஆர்வலர் என்.ஜெயகாந்தன் கூறுகையில், ''54 ஆண்டுக்கு பிறகு பாம்பன் - தனுஷ்கோடி புதுரோடுக்கு சுற்றுலா சாலை அமைக்க மாநில அரசு முன்வந்திருப்பது வரவேற்கதக்கது. இது 'பசுமை சாலை' ஆக அமையும். இத்திட்டத்திற்கான வழித்தடத்தை மாநில அரசுக்கு ரயில்வே நிர்வாகம் உடனே வழங்க வேண்டும். இதனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் சுற்றுலா மேம்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
12-ஜூலை-201807:35:43 IST Report Abuse
Loganathan Kuttuva இந்த பகுதியில் நகரும் மணல் குன்றுகளை தடுக்க மணலில் வேதிய பொருட்களை கலந்து மரங்கள் வளரும்படியாக செய்த நிறுவனம் எஸ்ஸோ ஆகும் தற்பொழுது அது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகும்.
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
12-ஜூலை-201807:32:14 IST Report Abuse
Loganathan Kuttuva தனுஷ்கோடி ரயில் பாதையில் அடிக்கடி மணலால் மூடப்பட்டுவிடும்.அதை அகற்றுவதும் சற்று சிரமம். புதிய சாலை அமைக்கும் பொழுது நன்கு உயர்த்தி அமைக்க வேண்டும் சாலைகளின் இருபுறமும் மரங்களை வளர்க்க வேண்டும் குறிப்பாக தென்னை மரங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை