லண்டன் பள்ளியில் சமஸ்கிருதம் கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

லண்டன் பள்ளியில் சமஸ்கிருதம் கட்டாயம்

Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (43)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
லண்டன்,பள்ளி,சமஸ்கிருதம்,கட்டாயம்

போபால் : பிரிட்டனின், லண்டன் நகரில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் பள்ளியில், 43 ஆண்டுகளாக, சமஸ்கிருத மொழி கட்டாய பாடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டன் நகரில், 1975ல் செயின்ட் ஜேம்ஸ் பள்ளி துவங்கப்பட்டது. இந்த பள்ளி, பிரிட்டனில், சமஸ்கிருத மொழியை மேம்படுத்த, சர்வதேச அளவில் பல பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், 'உலகின் மிகவும் பழமையான மொழியான சமஸ்கிருத இலக்கியத்தில் கூறப்பட்ட தத்துவங்கள் மற்றும் கருத்துகள், வாழ்க்கையை சரியான பாதையில் வாழ கற்றுத் தருகின்றன' என, கூறப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் இருந்து, ஆங்கிலம் மட்டுமல்லாமல், ஐரோப்பிய மொழிகள் தோன்றியதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த, 43 ஆண்டுகளாக, இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, சமஸ்கிருத மொழி, கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கு தேவையான சமஸ்கிருத பாடப் புத்தகங்களை, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள மோதிலால் பனாரசிதாஸ் பதிப்பகம் அனுப்புகிறது.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thiruvarangan poosai - Thiruvarangam,இந்தியா
13-ஜூலை-201806:56:15 IST Report Abuse
thiruvarangan poosai உண்மையின் ஒளியை ஆயிரம் சூரியனாலும் மிஞ்ச முடியாது . இது தான் மெய் பொருள். கற்பூர வாசனை புரிந்தால் இதன் பொருள் புரியலாம்.
Rate this:
Share this comment
Cancel
Shanmuga Sundaram - Bangalore,இந்தியா
12-ஜூலை-201812:19:47 IST Report Abuse
Shanmuga Sundaram இன்னும் திருவாசகம் படித்துஉணாரா உயிர்கள் உள்ளன ...
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
12-ஜூலை-201811:09:49 IST Report Abuse
madhavan rajan இது நிச்சயமாக மோடியின் தமிழை ஒழிக்கும் சதித்திட்டமாகத்தான் இருக்கவேண்டும். சுடலை உடனே தமிழை லண்டனில் கட்டாயப் பாடமாக்கப் போராடுவார். எல்லா சொம்புகளும் உடனே அவர் பின்னால் வந்து நில்லுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை