பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:கனமழை காரணமாக, திருப்பூர் மாவட்டம், உடுமலை, திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவிக்கு மேல், பாறைக்குகைக்குள் உள்ள, பஞ்சலிங்கங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அருவியில், அதிவேகமாக தண்ணீர் கொட்டுவதாலும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாலும், சுற்றுலா பயணிகள் அருவிக்குச்செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது.அருவிக்குச்செல்லும் பாதையும் மூடப்பட்டது; அறநிலையத்துறை ஊழியர்கள் சுற்றுலா பயணிகளை மேலே விடாமல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலை அடிவாரத்திலுள்ள, அமணலிங்கேஸ்வரர் கோவிலை சுற்றி வரும் பாதையும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. பல மாதங்களுக்கு பிறகு, பாலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை