வால்பாறையில் வரலாறு காணாத மழை நிரம்பி வழிகிறது சோலையாறு அணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வால்பாறையில் வரலாறு காணாத மழை நிரம்பி வழிகிறது சோலையாறு அணை

Added : ஜூலை 12, 2018
Advertisement

வால்பாறை:வால்பாறையில், வரலாறு காணாத அளவில் கனமழை பெய்வதால், மூன்று ஆண்டுக்கு பின், சோலையாறு அணை நிரம்பி, மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.கோவை மாவட்டம், வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் கனமழை பெய்ததால், கடந்த 1ம் தேதி, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நிரம்பியது. இதையடுத்து, பரம்பிக்குளம் அணைக்கு, சேடல்டேம் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக, இடைவிடாது மழை கொட்டுவதால், சோலையாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.சேடல்டேம் வழியாக வெளியேறும் தண்ணீர் அளவை விட அதிகமாக நீர் வரத்து இருந்ததால், அணையின் பாதுகாப்பு கருகி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மூன்று மதகுகள் திறக்கப்பட்டு, வினாடிக்கு, 679 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கேரளா சோலையாறு அணைக்கு சென்றது.நீர்மட்டம் உயர்வுமேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 3,337 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 722 கனஅடி தண்ணீரும், சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதனால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 164.55 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 7,855 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 6,617 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது.இதனால், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 33.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 8,481 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 2,123 கனஅடி தண்ணீர் துாணக்கடவுக்கு வெளியேற்றப்படுகிறது.வால்பாறை அடுத்துள்ள காடம்பாறை அணையின், 117 அடி உயரத்தில், நேற்று காலை நிலவரப்படி, 114 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. இதே போன்று, 125 உயரமுள்ள மேல்ஆழியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 120 அடியாக இருந்தது.விவசாயிகள் மகிழ்ச்சிவால்பாறையில் வரலாறு காணாத மழை காரணமாக, பி.ஏ.பி., பாசனத்திட்ட அணைகள் ஒவ்வொன்றாக நிரம்பி வருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு பின், அணைகள் நிரம்புவதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பி.ஏ.பி., பாசனத் திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் சோலையாறு அணை, கடந்த, 2014 ஆக., 1ம் தேதி நிரம்பியது. இதனையடுத்து, ஆக.,5ம் தேதி மூன்று மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த, 1ம் தேதி அணை நிரம்பினாலும், நேற்று நீர்வரத்து அதிகரித்ததால் மதகுகள் திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X