ஏ.டி.எம்., கொள்ளை விசாரணையில் விசாரணை துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., கொள்ளை விசாரணையில் விசாரணை துவக்கம்

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை:கோவையில், ஏ.டி.எம்., உடைத்து 30 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், சாட்சி விசாரணை துவங்கியது.கோவை, பீளமேடு, தண்ணீர் பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகேயுள்ள ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, 2017, டிச., 10ல், 30 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக, வட மாநிலங்களை சேர்ந்த, இஸ்லாமுதீன், 43, அமித்குமார்,25, சல்மான் முபாரக், 30, முஷ்டாக், 32, சுபேர், 29, ஜுல்பிகர், 25, அமீன்,34, மற்றொரு சுபேர் 33, மவுசம்கான்,30, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.கொள்ளை கும்பல் மீது கோவை ஜே.எம்:6 கோர்ட்டில் மார்ச்சில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கொள்ளையர் ஒன்பது பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் கண்ணன் முன்னிலையில் சாட்சி விசாரணை துவங்கியது. ஆறு பேர் சாட்சியம் அளித்தனர். உடைக்கப்பட்ட இரண்டு ஏ.டி.எம்., இயந்திரங்கள் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அரசு தரப்பில் வக்கீல் தங்கராஜ் ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை