ராகிங் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராகிங் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Added : ஜூலை 12, 2018
Advertisement

சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மேலாண்மைத் துறை சார்பில் யு.ஜி.சி., வழிகாட்டுதலின் பேரில் ராகிங் குறித்த விழிப்புணர்வு மாணவர்கள், ஆசிரியர்கள் கையெழுத்து இயக்கம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, மேலாண்மைத் துறை தலைவர் சமுத்திர ராஜ்குமார் தலைமை தாங்கினார். பேராசிரியர் ஜெயக்குமார் வரவேற்றார். பதிவாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்து ராகிங் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், கணினி துறை பேராசிரியர் சீனிவாசன், ராகிங் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் பேசினார். பின்னர் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய பலகையில் இரண்டாம் ஆண்டு மேலாண்மைத் துறையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ராகிங்கிற்கு எதிரான வாசகங்களை எழுதி கையெழுத்திட்டனர்.ராகிங்கை தடுப்பதாக உறுதி கூறி பேராசிரியர்களும் கையெழுத்திட்டனர். பேராசிரியர்கள் பஞ்சநதம், அய்யப்பராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement