ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்

Added : ஜூலை 12, 2018
Advertisement

கடலுார்:தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கம் சார்பில் 13ம் ஆண்டு பேரவைக் கூட்டம் கடலுாரில் நடந்தது.கடலுார் கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் தங்கபிரகாசம் வரவேற்றார். செயலர் தேவராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். 2017-18 ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையை பொருளாளர் சண்முகம் தாக்கல் செய்தார்.கூட்டத்தில், புதிய பென்ஷன் சட்டத்தை உடன் ரத்து செய்திட மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்வது. ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கம்யூடேஷன் பிடித்தம் செய்யும் காலத்தை 10 ஆண்டுகளாக குறைத்திட (அல்லது) 70 வயது வரை பிடித்திட தமிழக அரசையும், வாரியத்தையும் கேட்டுக்கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement