நடவு பணி குறித்து மாணவிகள் செயல்முறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடவு பணி குறித்து மாணவிகள் செயல்முறை

Added : ஜூலை 12, 2018
Advertisement

புதுச்சத்திரம்:மணிக்கொல்லை கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறை இறுதியாண்டு மாணவிகள், அப்பகுதி விவசாயிகளுக்கு நெல் நடவு செய்வது குறித்து விளக்கம் அளித்தனர்.அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்துறை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கிராமங்களில் தங்கி பயிற்சி பெறுவது வழக்கம். அதனையொட்டி மணிக்கொல்லை கிராமத்தில் வேளாண் துறை மாணவிகள் தங்கி பயிற்சி பெறுகின்றனர்.இதில் இப்பகுதியில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எந்த நெல் ரகம், என்ன இடைவெளியில் நடவு செய்வது, எந்த அளவு உரமிடுவது, பூச்சி தாக்குதலை எப்படி கட்டுப்படுத்துவது குறித்து விளக்கினர்.மேலும் வேளாண்துறை மாணவிகள் வயலில் இறங்கி எந்த இடைவெளியில் நாற்று நடவு செய்வது என செயல்முறை விளக்கம் அளித்தனர். வேளாண்துறை தலைவர் கனகசபாபதி, பேராசிரியர் ஜெய்சங்கர், விவசாய சங்க ராமச்சந்திரன் உள்ளிட்ட விவசாயிகள், மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement