மார்க்கெட் கமிட்டிக்கு 7,400 மூட்டை வரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட் கமிட்டிக்கு 7,400 மூட்டை வரத்து

Added : ஜூலை 12, 2018
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று ஒரே நாளில் 7,400 மூட்டை வேளாண் பொருட்கள் விற்பனைக்கு வந்தன.விருத்தாசலம், கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம், ராஜேந்திரப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், நேற்று ஒரே நாளில் நெல் 7,000 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. மேலும், எள் 150, உளுந்து 100 உட்பட 7,400 மூட்டை வேளாண் பொருட்கள் விற்பனைக்கு வந்தன.அதில், அதிக பட்சமாக வேர்க்கடலை 5,500 ரூபாய்க்கும், எள் 6,660, உளுந்து 4,883, பச்சை பயறு 1,889, வரகு 1,784, தேங்காய் பருப்பு 8,909, கேழ்வரகு 1,932, அம்பாசமுத்திரம் (1009) 1,113, ஆடுதுறை (43) 1,094, ஆந்திரா பொன்னி 1,791 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டன.

Advertisement