புதுச்சேரியில் பைக் திருடிய வாலிபர்கள் கைது| Dinamalar

புதுச்சேரியில் பைக் திருடிய வாலிபர்கள் கைது

Added : ஜூலை 12, 2018
Advertisement

புதுச்சேரி:தேங்காய்திட்டு துறைமுகத்தில் பைக் திருடிய பண்ருட்டி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சீர்காழி நெப்தாதுார் முல்லையாம்பட்டிணத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (31); தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் கடந்த 7ம் தேதி 2 மோட்டார் சைக்கிளில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். இங்கு பல இடங்களை சுற்றிப் பார்த்துள்ளனர். பின், வீட்டிற்கு மீன் வாங்கிச் செல்வதற்காக, தேங்காய்திட்டு துறைமுக பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு தங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு மீன் வாங்கிக் கொண்டு, திரும்ப வந்து பார்த்தபோது புருஷோத்தமனின் ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிளை காணவில்லை. புருஷோத்தமன் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்துவிட்டு ஊருக்கு சென்றுவிட்டார்.இதனிடையே, முதலியார்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் கொம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர்.அவர்கள் பண்ருட்டியை சேர்ந்த அப்பு (எ) அய்யனார், 25; கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடியை சேர்ந்த சந்திரன், 29, என்பதும், புருஷோத்தமனின் மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement