சென்னையில் பைக் திருடிய 5 பேர் அவலூர்பேட்டையில் சிக்கினர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் பைக் திருடிய 5 பேர் அவலூர்பேட்டையில் சிக்கினர்

Added : ஜூலை 12, 2018
Advertisement

அவலுார்பேட்டை:சென்னையில் பைக் திருடிய 5 வாலிபர்கள், அவலுார்பேட்டைபோலீசாரிடம் சிக்கினர்.
விழுப்புரம் அடுத்த அவலுார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு அக்தர் பாஷா, கான்ஸ்டபிள்கள் கமலமுருகன், பாரதி ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது எய்யில் கிராமத்தில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில், பைக்கில் சுற்றிய வாலிபர்களை, போலீசார் மடக்கி, விசாரித்தனர். விசாரணையில், சென்னை, நெடுங்குன்றம் பழனி மகன் பூங்காவனம், 24; சேட்டு மகன் 16 வயது வாலிபர்; விருகம்பாக்கம் பழனி மகன் விஜய்,21; ஆரணியைச் சேர்ந்த 17 வயது வாலிபர், போளூர் தாலுகா படவேடு மகிமை தாஸ் மகன் நித்யானந்தம், 27, ஆகியோர் என தெரிய வந்தது. அவர்கள் சென்னை அரும்பாக்கம் பகுதியில் பைக்குகளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதை தொடர்ந்து சென்னை, அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரும்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரிடம் 5 வாலிபர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 3 பைக்குகளையும் அவலுார்பேட்டை போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisement