திண்டிவனத்தில் கார் விபத்து கடலூரை சேர்ந்த 2 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் கார் விபத்து கடலூரை சேர்ந்த 2 பேர் பலி

Added : ஜூலை 12, 2018
Advertisement

திண்டிவனம்:திண்டிவனம் அருகே, டிப்பர் லாரி மீது கார் மோதிய விபத்தில், கடலுாரைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் இறந்தனர்.கடலூர், மஞ்சக்குப்பம் சுதர்சன் நாயுடு தெருவை சேர்ந்தவர் காசிம் மகன் முபாரக், 24. இவரது தம்பி சவுகத் அலி, 22, நேற்று குவைத்தில் இருந்து, சொந்த ஊருக்கு திரும்பினார்.அவரை சென்னை ஏர் போர்ட்டில் இருந்து அழைத்து வருவதற்காக, காலை 6:00 மணிக்கு, முபராக், மேல்பட்டாம்பாக்கம் சிங்காரப்பேட்டை தெருவை சேர்ந்த டிரைவர் விக்னேஷ், 25; என்பவரை அழைத்துக் கொண்டு, ஹூண்டாய் காரில் புறப்பட்டு சென்றார்.காலை 7:30 மணியளவில், விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் அடுத்த கூச்சிகுளத்தூர் அய்யனார் கோவில் அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி, எதிர் திசையில் பாய்ந்தது. அப்போது, சென்னையில் இருந்து எதிரே வந்த டிப்பர் லாரி மீது கார் மோதியது.இந்த விபத்தில் முபாரக், டிரைவர் விக்னேஷ் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.இது குறித்து தகவலறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்தவர்களின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement