தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருத்தாசலம்:இரண்டாவது கணவர் மீது விரக்தியடைந்து தீ வைத்துக் கொண்ட பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார்.விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி அம்சவள்ளி, 37; இரண்டாவது கணவரான வேல்முருகனுடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த அம்சவள்ளி, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.அப்போது, அங்கு வந்த வேல்முருகன், உன்னால் தான் பிரச்னை எனக் கூறி மீதமிருந்த மண்ணெண்ணையை அவரது மகள் நந்தினி, 18; மீது ஊற்றி, தீ வைத்து எரித்தார். படு காயமடைந்த இருவரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அம்சவள்ளி புகாரின் பேரில், கொலை முயற்சி பிரிவின் கீழ் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வேல்முருகனை கைது செய்தனர்.இரண்டு நாட்களில் நந்தினி இறந்த நிலையில், கொலை முயற்சி பிரிவை மாற்றி, கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், அம்சவள்ளி, சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X