மைனர் பெண் கடத்தல் வாலிபருக்கு போலீஸ் வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மைனர் பெண் கடத்தல் வாலிபருக்கு போலீஸ் வலை

Added : ஜூலை 12, 2018
Advertisement

விருத்தாசலம்:மைனர் பெண்ணை கடத்திச் சென்றதாக அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில், வாலிபரை தேடி வருகின்றனர்.விருத்தாசலத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவி, கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து மாயமானார். உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
அப்போது, ஆலிச்சிகுடியை சேர்ந்த செல்வகுமார் மகன் உதயகுமார் என்பவர் தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement