வாலிபர் உடல் போலீஸ் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் உடல் போலீஸ் விசாரணை

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்:கடலுார் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையின் போது இறந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார், பஸ் நிலையத்தில் கடந்த 30ம் தேதி காலை 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் மயக்க நிலையில் கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையின் போது அவரை விசாரித்ததில் நெய்வேலியைச் சேர்ந்த பலராமன் மகன் ராஜா, 29; என்பது தெரிய வந்தது. இந்நிலையில் அவர் கடந்த 2ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர், சிமென்ட் நிற கட்டம் போட்ட சட்டையும், நீலம், பச்சை மற்றும் கருப்பு நிற கட்டம் போட்ட கைலி அணிந்திருந்தார்.அவரை பற்றிய முழுவிபரம் இல்லாததால் அவரது உடல், மருத்துவமனை பிரேத கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, இறந்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இவரை பற்றி தகவல் அறிந்தவர்கள் கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு 04142-235271 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை