கம்பி வலை திருடியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கம்பி வலை திருடியவர் கைது

Added : ஜூலை 12, 2018
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் அருகே கம்பி வலையை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீமுஷ்ணத்தில் அடுத்த மேல்புளியங்குடியில் உள்ள சாய்பாபா கோவில் திருப்பணிக்காக கோவிலைச் சுற்றிலும் இரும்பு கம்பியால் வேலி அமைக்க கம்பி வலை வாங்கி வைத்திருந்தனர். இந்த கம்பி வலைகள் கடந்த 7ம் தேதி திருடு போனது.இதுகுறித்து கோவில் நிர்வாகி கோதண்டராமன் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், கோவில் வளாகத்தில் இருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கம்பி வலைகளை திருடிய நபர்கள் அடையாளம் தெரிந்தது.அதனைத் தொடர்ந்து, ஸ்ரீமுஷ்ணம் சேடத்தெருவைச் சேர்ந்த நாராயணனை, 28; கைது செய்து, அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் இருவரை தேடி வருகின்றனர்..

Advertisement