நுண்ணீர் பாசன திட்ட விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசன திட்ட விழிப்புணர்வு முகாம்

Added : ஜூலை 12, 2018
Advertisement

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த விசூர் கிராமத்தில் வேளாண், வருவாய்த் துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமில் விவசாயிகளுக்கு வருவாய்த் துறை மூலம் அடங்கல், சிறுகுறு விவசாயிகளுக்கான சான்று வழங்கப்பட்டன.விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன திட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்குவது குறித்து வேளாண் உதவி இயக்குனர் பேசினார். கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனத்தின் நன்மை குறித்து இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை அலுவலர் கருணாகரன் விளக்கினார். சொட்டுநீர் பாசனம் அமைத்தல், பராமரித்தல் குறித்து நாகர்ஜூனா நிறுவன கலியபெருமாள் பேசினார்.வேளாண் உதவி இயக்குனர் மோகன்ராஜ், வேளாண் அலுவலர் அகிலா, துணை வேளாண் அலுவலர் கரிகாலன், வி.ஏ.ஓ., சத்தியமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் குமாரசாமி பங்கேற்றனர்.

Advertisement