சொட்டுநீர் பாசன சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டுநீர் பாசன சிறப்பு முகாம்

Added : ஜூலை 12, 2018
Advertisement

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் கூட்டுறவு வங்கியில் அண்ணாகிராமம் வட்டார வேளாண் மையம் சார்பில் பிரதம மந்திரியின் விவசாய பாசன திட்டம் சார்பில் சொட்டுநீர் பாசனம் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.உதவி வேளாண் இயக்குநர் மல்லிகா முகாமை துவக்கி வைத்தார். வேளாண் அலுவலர் சுரேஷ் உதவி அலுவலர்கள் சின்னதுரை, பாஸ்கர் ராஜ், ரமேஷ், செந்தில் விவசாய சங்க தலைவர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில், சொட்டுநீர் பாசனம் மூலம் பயிர் செய்தால் தண்ணீர், ஆட்கள் மற்றும் உரத்தின் தேவை குறையும். பயிர் செழித்து வளர்ந்து கூடுதல் மகசூல் தரும். இயந்திரங்களை பயன்படுத்த முடியும்.சிறு குறு விவசாயகளுக்கு 100 சதவீதமும் மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கபடுகிறது.இதற்கு விவசாயி புகைபடம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சிட்டா அடங்கல், நில வரைபடம், கிணறு ஆவணம் சிறு குறு விவசாயி அட்டை குத்தகை நிலமாக இருந்தால் பதிவு செய்யப்பட்ட ஆவணம் போன்றவற்றை கொடுக்க வேண்டும் என மல்லிகா கூறினார். முகாமில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு சொட்டுநீர் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

Advertisement