டிராக்டர் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் பறிமுதல்

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேப்பூர்:வேப்பூர் அருகே நிலத்தில் கொட்டுவதற்கு வழங்கப்பட்ட சான்றிதழை பயன்படுத்தி தனியார் கல்லுாரியில் வண்டல் மண் கொட்டிய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.வேப்பூர் அடுத்த கொத்தனுாரைச் சேர்ந்தவர் அரிக்கிருஷ்ணன், 30; இவர், நேற்று காலை கொத்தனுார் ஏரியில் டிராக்டர் மூலம் வண்டல் மண்ணை ஏற்றி கொண்டு, கண்டப்பங்குறிச்சி தனியார் கல்லுாரியில் கொட்டினார். தகவலறிந்து அங்கு வந்த கடலுார், தனி வருவாய் அலுவலர் கருப்பையாக தலைமையிலான அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.அதில், விவசாய நிலத்தில் கொட்டுவதற்கு வழங்கப்பட்ட சான்றிதழை பயன்படுத்தி தனியார் கல்லுாரியில் வண்டல் மண்ணை கொட்டியது தெரிய வந்தது. பின்னர், டிராக்டரை பறிமுதல் செய்து வேப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை