பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற பெண்ணாடம் விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற பெண்ணாடம் விவசாயிகள் கோரிக்கை

Added : ஜூலை 12, 2018
Advertisement

பெண்ணாடம்:பெண்ணாடம் பெரிய ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் -- பெ.கொல்லத்தங்குறிச்சி சாலையில் உள்ள ஏரிக்கு மழைநீர் மற்றும் வரத்து வாய்க்கால் மூலம் நீர்ப்பிடிப்பு செய்யப்பட்டு, பெண்ணாடம், திருமலை அகரம், பெ.கொல்லத்தங்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 200 ஏக்கரில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தனர்.இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக ஏரி துார்வாரப்படாததால் சம்பு, கோரைகள் அதிகளவில் மண்டி, துார்ந்தது. இதனால், மழைக்காலத்தில் முழுமையாக நீர் பிடிப்பு செய்ய முடியாமல் விவசாயிகள் சாகுபடி செய்வதற்கு சிரமம் அடைந்தனர்.மேலும், பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் நாளடைவில் அருகிலுள்ள விவசாயிகள் பெரிய ஏரியை ஆக்கிரமித்து விளை நிலங்களாக மாற்றி சாகுபடி செய்து வருகின்றனர். இதனால், 6 ஏக்கர் அளவில் இருந்த ஏரி, தற்போது அரை ஏக்கரை விட குறைந்த பரப்பில் உள்ளது. எனவே, பெண்ணாடம் பெரிய ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement