Unnao gangrape case: CBI names BJP MLA Kuldeep Singh Sengar as accused in second chargesheet | பலாத்கார வழக்கு: எம்.எல்.ஏ. மீது சி.பி.ஐ.,குற்றப்பத்திரிக்கை| Dinamalar

பலாத்கார வழக்கு: எம்.எல்.ஏ. மீது சி.பி.ஐ.,குற்றப்பத்திரிக்கை

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பலாத்கார வழக்கு, சிபிஐ குற்றப்பத்திரிக்கை, குல்தீப் சிங் சென்கர் ,  பாஜக எம்எல்ஏ, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் சென்கர் , குல்தீப் சிங் கைது , சிபிஐ விசாரணை ,
Rape case, CBI chargesheet, Kuldeep Singh Sengar, BJP MLA,
 BJP MLA Kuldeep Singh Sengar, Kuldeep Singh arrested, CBI investigation,

புதுடில்லி: உ.பி.,யில், பா.ஜ. எம்.எல்.ஏ. ஒருவர் மீது இளம் பெண் அளித்த பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துளளது.
உத்தர பிரதேசத்தில், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கர் மற்றும் அவரது சகோதரர்,கடந்த 2017- ஜூன் 4-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இளம் பெண் புகார் அளித்தார்.
நடவடிக்கை இல்லை
இதையடுத்து, தனக்கு நியாயம் வேண்டியும், நடந்த கொடுமைக்கு தீர்வு கிடைக்காததை கண்டித்து, இளம் பெண் முதல்வர் வீடு முன், தீக்குளிக்க முயன்றார்.பின்னர் .இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏ., குல்தீப் சிங் மீது, முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள், , லக்னோவிற்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தி மூன்று தனித்தனி வழக்குகளை, சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, எம்.எல்.ஏ., குல்தீப் சிங்கை கைது செய்யும்படி, அலகாபாத் உயர் நீதிமன்றம், சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது. இதையடுத்து குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்கர் மீது 19 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-ஜூலை-201812:06:49 IST Report Abuse
Pasupathi Subbian இந்த குற்றசாட்டு உண்மை எனில். கடும் தண்டனை இவருக்கு உண்டு.
Rate this:
Share this comment
Cancel
12-ஜூலை-201809:23:40 IST Report Abuse
மாயா இவர்(ன்) எல்லாவிதமான போதைக்கும் அடிமை. விரைவில் தண்டனை தரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
12-ஜூலை-201808:30:03 IST Report Abuse
Kuppuswamykesavan அட, ஒழுக்கமில்லா ஆட்கள் சிலர், எல்லா இடங்களிலும், எல்லா கட்சிகளிலும் உண்டுதானே?. இப்படிப்பட்ட ஒழக்கமில்லாதவர்களை, அந்தந்த கட்சியின் தலமைகள்தான் களையெடுக்கனும்ங்க.
Rate this:
Share this comment
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
12-ஜூலை-201812:48:22 IST Report Abuse
GB.ரிஸ்வான் அந்த கட்சிகளின் தலைமைக்கு இப்படிப்பட்ட கயவர்கள் தான் தேவை என பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை