இலவச அரிசி இனி தடையின்றி வழங்க அமைச்சர் உறுதி கவர்னர் ஒப்புதல் தராததால் தாமதம் என விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இலவச அரிசி இனி தடையின்றி வழங்க அமைச்சர் உறுதி கவர்னர் ஒப்புதல் தராததால் தாமதம் என விளக்கம்

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement

'ரேஷனில் இலவச அரிசி, அடுத்த மாதம் முதல் தொடர்ந்து வழங்கப்படும்' என, அமைச்சர் கந்தசாமி சட்டசபையில் அறிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அன்பழகன் (அ.தி.மு.க.,): காங்., ஆட்சி அமைந்ததில் இருந்து எத்தனை மாதம் இலவச அரிசி தரப்பட்டது. அரிசி வழங்கப்படாத மாதத்திற்கு உண்டான தொகையை மக்களுக்கு வங்கி மூலம் நேரடியாக வழங்கும் திட்டம் உள்ளதா. மாதம் எத்தனை கிலோ அரிசி வழங்கப்படுகிறது. அதற்கு ஆகும் செலவு எவ்வளவு. ஒரு கிலோ அரிசியின் விலை என்ன.
அமைச்சர் கந்தசாமி: 12 மாதம் வழங்கப்பட்டுள்ளது. ஏ,.ஏ.ஒய்., மற்றும் சிவப்பு நிற அட்டை தாரர்களுக்கு 20 கிலோ அரிசி, மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. மாகியில் மட்டும் 15 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மற்றும் 5 கிலோ அரிசி 5 கிலோ கோதுமை வழங்கப்படுகிறது. மாதம் தோராயமாக ரூ.15.88 கோடி செலவு செய்யப்படுகிறது.ஒரு கிலோ அரிசி புதுச்சேரியில் ரூ.28.90, காரைக்காலில் ரூ.29.20, மாகியில் ரூ.31.95, ஏனாமில் ரூ.31.77, கோதுமை ரூ.28.77 என்ற விலையில் வாங்கப்படுகிறது.
அன்பழகன்: நீங்கள் ஆட்சிக்கு வந்து 26 மாதம் ஆகிறது. ஆனால் 8 மாதம்தான் அரிசி வழங்கியுள்ளீர்கள்.
அமைச்சர் கந்தசாமி: கவர்னர் ஏழைகளுக்கு மட்டுமே அரிசி வழங்க வேண்டும் என்கிறார், உறுப்பினர்கள் அனைவருக்கும் அரிசி தர வலியுறுத்துகிறார்கள். இதனால் கோப்பு கவர்னரிடம் சென்று திரும்பி வருகிறது. கோப்பு போய் வருவதால் தாமதம் ஆகிறது.
அன்பழகன்: கடந்த ஆண்டு ரூ.216 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3.36 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கும் தலா 20 கிலோ அரிசி வழங்க ஒதுக்கப்பட்டது. ஆனால் அரிசி போடவில்லை.
பாலன் (காங்.,)-: மாதம்தோறும் ஏன் கவர்னருக்கு கோப்பு அனுப்புகிறீர்கள். அனுப்ப வலியுறுத்தினால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு செல்லுங்கள்.
அனந்தராமன் (காங்.,):- தேவையில்லாத கோப்புகளை கவர்னருக்கு அனுப்பாதீர்கள். கோர்ட்டில் மனு தாக்கல் செய்யுங்கள்.
அமைச்சர் கந்தசாமி:- அடுத்த மாதம் முதல் தொடர்ந்து அரிசி போடப்படும்.
பாலன் (காங்.,):- சிவப்பு ரேஷன் அட்டையை மஞ்சள் ரேஷன் அட்டையாக திடீரென்று அதிகாரிகள் மாற்றியுள்ளனர். 5196 சிவப்பு ரேஷன் அட்டைகள் மஞ்சள் ரேஷன் அட்டையாக மாறியுள்ளது. இந்த குளறுபடிக்கு தீர்வு காணுங்கள்.
அமைச்சர் கந்தசாமி-: ரேஷன் கடை ஊழியர்கள் சர்வே செய்து மாற்றியுள்ளனர். இதில் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது 500 எல்.டி.சி., ஊழியர்கள் மூலம் சர்வே பணி செய்ய உள்ளோம். அடுத்த வாரம் பணி தொடங்கிவிடுவோம். சர்வே முடியும் வரை , சிவப்பு அட்டை வைத்துள்ளோருக்கு இலவச அரிசி 20 கிலோ வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201809:08:32 IST Report Abuse
Srinivasan Kannaiya நீங்கள் சுண்டல் பண்ணி இருத்தால் எப்பிடி ஆளுநர் அனுமதி தருவார்... எவ்வளவு அரிசியை உங்கள் உடன் பிறப்புக்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்துகிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை