எங்கள் ஆட்சியில் என்ன கொடுக்கவில்லை எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி ஆவேசம்| Dinamalar

எங்கள் ஆட்சியில் என்ன கொடுக்கவில்லை எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி ஆவேசம்

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுச்சேரி:முதியோர் மற்றும் விதவை பென்ஷன் சரிவர வழங்கப்படவில்லை என சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் சமாரியாக புகார் தெரிவித்தனர்.சட்டசபையில் நடைபெற்ற விவாதம்:சிவா (தி.மு.க.): முதியோர், விதவைகள் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.2 ஆயிரமாக எப்போது வழங்கப்படும். அரசு அமைந்தவுடன் உயர்த்திய ஓய்வூதியத்தொகை ரூ.100 எப்போது கிடைக்கும். விடுபட்டுள்ள தகுதி உள்ளவர்களுக்கு முதியோர், விதவை பென்ஷன் வழங்கப்படுமா.அமைச்சர் கந்தசாமி: உதவித்தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தித்தர வழியில்லை. நிதிநிலைக்கு ஏற்ப உதவித்தொகையில் ரூ. 100 உயர்த்தி தரப்படும் .சிவா: இறந்ததால் உருவாகும் இடங்களுக்கு கொடுத்துவிட்டீர்களா?அமைச்சர் கந்தசாமி: உங்கள் தொகுதிக்கு தரப்படும்.எதிர்க்கட்சித் தலைவர்ரங்கசாமி: அவர் தொகுதிக்கு மட்டும் தராதீர்கள். புதுச்சேரி மாநிலம் முழுக்க அனைத்து தொகுதிக்கும் தாருங்கள்.கோபிகா (என்.ஆர்.காங்.): எனது தொகுதிக்கும் அதிகளவு தர வேண்டும்.சபாநாயகர் வைத்திலிங்கம்: உங்களை சகோதரியாக நினைத்து அமைச்சர் உங்கள் தொகுதிக்குத்தான் அதிகம் கொடுத்துள்ளார்.கோபிகா: நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை தொகுதிக்குத்தான் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது.சிவா: நெல்லித்தோப்பு தொகுதிக்கு கொடுப்பதற்காக எனது தொகுதிக்கும் சேர்த்து கொடுக்கப்பட்டது.செல்வம் (என்.ஆர்.காங்.): உதவித்தொகை சரியான தேதியில் கிடைப்பதில்லை. 5ம் தேதிக்குள் தாருங்கள்.முதல்வர் நாராயணசாமி-: இரண்டு ஆண்டுகள் நீங்கள் தரவில்லை. நீங்கள் என்ன கொடுத்தீர்கள்.எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி: என்ன கொடுக்கவில்லை என்று உங்கள் ஊரில் கேட்டு சொல்லுங்கள். நீங்கள் எங்கு இருந்தீர்கள். அனைத்தும் செய்தோம்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201809:03:11 IST Report Abuse
Srinivasan Kannaiya எல்லாம் கொடுத்து இருந்தால் மக்கள் உங்களை ஏன் வரவிடாமல் செயது இருக்கிறார்கள்... நீங்கள் சுத்தபத்தமாக இருக்கலாம்... ஆனால் உங்கள் உறவினர்கள் உங்கள் கட்சிக்காரர்கள் எல்லோரும் கையை நீட்டிக்கொண்டு அல்லவா இருந்தார்கள்..நீங்கள் வாங்காமல் இருப்பது பெருசு கிடையாது... மற்றவர்களை வாங்காமல் இருக்க பார்த்து கொள்ளுவது பெருசு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை