ஆம்புலன்ஸ் வசதி கோபிகா கோரிக்கை| Dinamalar

ஆம்புலன்ஸ் வசதி கோபிகா கோரிக்கை

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி:திருபுவனை காவல் நிலைய காவலர் குடியிருப்பில் சேதமடைந்துள்ள வீடுகளை புனரமைக்க வேண்டும் என கோபிகா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
சட்டசபையில் நடைபெற்ற விவாதம்:
கோபிகா (என்.ஆர்.காங்.,): திருபுவனை காவல் நிலைய காவலர் குடியிருப்பு வீடுகள் மிகவும் சேதமடைந்து உள்ளதால் இந்த நிதி ஆண்டில் நிதி ஒதுக்கி, சீரமைத்து தர அரசிற்கு எண்ணம் உள்ளதா? திருபுவனை பகுதியில் தொழிற்சாலைகளும், மது பார்களும் அதிகம் உள்ளதால் விபத்து, தற்கொலை சம்பவம் அதிகம் ஏற்படுகிறது. பாதிக்கப்படும் பொதுமக்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே முதல்வர் நிதியில் இருந்து திருபுவனை காவல் நிலையத்திற்கு மினி ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
முதல்வர் நாராயணசாமி: திருபுவனை காவல் நிலைய காவலர் குடியிருப்பு வீடுகள் இந்த ஆண்டு நிதி ஒதுக்கி புதுப்பித்து தரப்படும். எதிர்க்கட்சி உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கி, திருபுவனை காவல் நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும்.இவ்வாறு முதல்வர் உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை