அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் பழுது லட்சுமிநாராயணன் குற்றச்சாட்டு| Dinamalar

அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் பழுது லட்சுமிநாராயணன் குற்றச்சாட்டு

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுச்சேரி:'அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் பழுதாகியுள்ளன, மருந்துகள் இல்லை' என, காங்., எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன் குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
லட்சுமி நாராயணன் (காங்.,): இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை, கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி, ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நோயாளிகள் இறந்த புகார்கள் பற்றி நடத்திய விசாரணை முடிவின்படி அரசு எடுத்த சீர்த்திருத்த நடவடிக்கை என்ன.
முதல்வர் நாராயணசாமி: பத்து புகார்கள் வந்தன. இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள் மீது எந்த குறைபாடும் இல்லை. மருந்துகள் கையிருப்பில் உள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
லட்சுமி நாராயணன்:- நிறைய இறப்புக்கு, சாதனங்கள் பழுதுதான் காரணம். தேவையான மருந்துகள் இல்லை. உயிர்காக்கும் மருந்து, தேவையானவை இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து இல்லை என்று எழுதி அனுப்புகிறார்கள்.
முதல்வர்-: சாதனங்களை பராமரிக்க தனியாருக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் பராமரிக்கிறார்கள். அது சரியில்லை. புதிதாக டெண்டர் விடப்பட்டு, சாதனங்களை வாங்கிய நிறுவனத்திடமே பராமரிப்புக்கான ஒப்பந்தம் போட முயற்சி செய்கிறோம். மத்திய அரசிடம் உள்ள விதிமுறைகளின்படி அத்தியாவசிய மருந்துகளை வைத்துள்ளோம்.ஏழைகளுக்கு விலை உயர்ந்த மருந்துகளை தருகிறோம். சில தட்டுப்பாடு இருந்தாலும் அதை சரிசெய்கிறோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-ஜூலை-201810:40:43 IST Report Abuse
Cheran Perumal சூப்பர் கேள்வி. வழ வழா பதில்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201809:07:06 IST Report Abuse
Srinivasan Kannaiya எல்லா இயந்திரங்கள் வாங்குவது உண்மை... ஆனால் அவற்றை பழுதாக்கி விட்டு தனியார் மருத்து மனைக்கு அனுப்பவது உண்மை...அந்த மருத்துவமனை அந்த அரசு மருத்துவருடையது ஆக இருக்கலாம் அல்லது அவருடைய பினாமி பேரில் இருக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை