அனைத்து திட்டங்களும் அமைச்சர்கள் தொகுதிக்கே செல்கிறது: பாலன் குற்றச்சாட்டு| Dinamalar

அனைத்து திட்டங்களும் அமைச்சர்கள் தொகுதிக்கே செல்கிறது: பாலன் குற்றச்சாட்டு

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி:தவறுக்கு துணை போகும் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என சட்டசபையில் பாலன் எம்.எல்.ஏ., பேசினார்
மானியக் கோரிக்கை விவாதத்தில் அவர் பேசியதாவது:
குப்பை வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை அள்ளுவதில் உள்ள ஆள் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகர அமைப்பு குழுமத்தில் இருந்து பத்திரப்பதிவை பிரிக்க வேண்டும். சாதாரண மக்கள் அங்கு சென்று ஒப்புதல் வாங்குவது முடியாத காரியமாக உள்ளது. அரசில் திட்டமிடுதல் சரியாக இல்லை. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பதில்லை என்பதால் ஆளும்கட்சியே கேள்வி கேட்கிறோம். அதிக நிறைகள் இருந்தாலும் சில குறைகளை சுட்டிக்காட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.மின் வசதி செய்வதற்கான பணத்தை நகராட்சியிடம் தராமல் மின் துறைக்கே தர வேண்டும். குடிசை மாற்று வாரியத்தில் லாம்பர்ட் சரவணன் நகரில் கோஷ்டி மோதல் அடிக்கடி ஏற்படுகிறது. காலியாக உள்ள வீடுகளில் சமூக விரோதிகள் புகுந்து ஒயர்கள், பைப்புகளை திருடி விற்கின்றனர். எனவே அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.தவறுக்கு துணை போகும் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். ஆதிதிராவிடர் நலன் கருதி அனைத்து தொகுதிகளுக்கும் நிதி வழங்க வேண்டும். 2 ஆண்டாக ஆரோ சிஸ்டம் நான் கேட்டும் என் தொகுதிக்கு வழங்கவில்லை.எல்லா திட்டமும் அமைச்சர்கள் தொகுதிக்கே செல்கிறது. அனைத்து தொகுதிக்கும் பகிர்ந்தளியுங்கள்.இவ்வாறு அவர்பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை