துணைமின் நிலைய பணி அசோக் ஆனந்த் வலியுறுத்தல்| Dinamalar

துணைமின் நிலைய பணி அசோக் ஆனந்த் வலியுறுத்தல்

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி:சட்டசபையில் நடைபெற்ற விவாதம்:அசோக் ஆனந்த் (என்.ஆர்.காங்.,): லாஸ்பேட்டையில் துணை மின் நிலையம் அமைக்க பூர்வாங்க பணிகூட நடைபெறவில்லை என்பதை அரசு அறியுமா? அத்திட்டத்தை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா.அமைச்சர் கமலக்கண்ணன்: லாஸ்பேட்டையில் துணை மின் நிலையம் அமைக்க தேர்ந்தெடுத்த நிலத்தை ஆர்ஜிதம் செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவை நீக்கவும், நில ஆர்ஜிதப்பணிகளை விரைந்து முடிக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அசோக் ஆனந்த்: முக்கியமான இந்த விஷயம் பற்றி 2 ஆண்டாக பேசி வருகிறேன். உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் வேறு இடத்தை தேர்வு செய்து முடித்து இருக்கலாம். தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை தொகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் இருந்து வருகிறது. மின் மாற்றிகள் அமைத்தாலும் பிரச்னை தீராது. இ.சி.ஆர்., சாலை மீன் மார்க்கெட்டிற்கு பின் பக்கம் உள்ள இடம் துணை மின் நிலையம் அமைப்பதற்கு ஏற்றது. எனவே அங்கு அமைக்க வேண்டும்.அமைச்சர் கமலக்கண்ணன்: உறுப்பினர் மற்றும் துறை அதிகாரிகளுடன் பேசி முடிவு எடுத்து, விரைவில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை