கோரிக்கைகளில் ஒன்றைகூட நிறைவேற்றவில்லை: அசனா| Dinamalar

கோரிக்கைகளில் ஒன்றைகூட நிறைவேற்றவில்லை: அசனா

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி:கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டசபையில் கூறிய குறைகளில் ஒன்றைக்கூட அரசு நிவர்த்தி செய்யவில்லை என அசானா எம்.எல்.ஏ., கூறினார்.மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:கடந்த 2 சட்டமன்ற கூட்டத்தில் கூறிய அதே குறைகளை தான் இப்போதும் கூறுகிறேன். ஆனால் ஒரு குறை கூட நிவர்த்தி செய்யப்படவில்லை. காரைக்கால் கலெக்டருக்கு உரிய அதிகாரம் கொடுங்கள். அவசர காலத்தில் முடிவெடுக்க முடியாத நிலையில் அவர் உள்ளார். தாசில்தார், துணை தாசில்தார், பதவிகள் அனைத்தையும் ஒரே அதிகாரியே பார்த்துவருவதால் சிரமம் ஏற்படுகிறது.நகராட்சிக்கு சொந்தமான இடங்களை வாடகை விட்டு வருமானத்தை பெருக்கலாம். கேளிக்கை வரியை முறையாக வசூலிக்க வேண்டும். 7வது ஊதியக்குழு சம்பளம் வழங்காததால் நகராட்சி ஊழியர்கள் நடத்தும் போராட்டத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்களுக்கு சரியாக பணம் தராததல் பணியை அவர்கள் செய்வதில்லை. இதனால் பல பணிகள் பாதியிலேயே நிற்கிறது.காரைக்காலில் பாதாள சாக்காடை திட்டம் கொண்டு வருவது குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை. காரைக்காலில் கிரிக்கெட் மைதானம் அமைத்து தர வேண்டும். கோவில் பூசாரிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்க வேண்டும். 16 ஆண்டுகளாக ஹஜ் கமிட்டி கூட்டப்படாததால் சில கோட்டாக்களை பெற முடிவதில்லை. ஹஜ் கமிட்டியை உடனே அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X