அமைச்சருடன் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மோதல்| Dinamalar

அமைச்சருடன் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மோதல்

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி:அரசு பள்ளியை தரம் உயர்த்துவது தொடர்பாக, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
பாஸ்கர் (அ.தி.மு.க.,): முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட அர்ச்சுன சுப்புராய நாயகர் அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா.அமைச்சர் கமலக்கண்ணன்: அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இந்த பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தும் எண்ணம் அரசுக்கு ஏற்படவில்லை.தொடர்ந்து, பாஸ்கர் எம்.எல்.ஏ., அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அவருடன் அன்பழகனும் சேர்ந்து கொண்டார். எம்.எல்.ஏ.,க்களின் பேச்சை கண்டித்து, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் பதிலடி கொடுக்க, காரசார விவாதம் நடந்தது. சபாநாயகர் வைத்திலிங்கம் தலையிட்டு, அமைச்சர்களையும் எம்.எல்.ஏ.,க்களையும் அமைதிப்படுத்தினார். பின், இது தொடர்பான விவாதங்களை, அவைக்குறிப்பில் இருந்து நீக்கி, சபாநாயகர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X