கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தை அரசே ஏற்க கோரிக்கை| Dinamalar

கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தை அரசே ஏற்க கோரிக்கை

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுச்சேரி:'இந்து அறநிலையத் துறையால் எனது தொகுதி புறக்கணிக்கப்படுகிறது' என, சட்டசபையில் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., குற்றம்சாட்டினார்.
மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:எனது தொகுதியில் 5 வார்டுகள் உள்ளன. ஆரம்பத்தில் அதிக ஆட்கள் குப்பை வாருவதற்கு இருந்தனர். இப்போது ஆட்கள் குறைவாக இருப்பதால் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. இறைச்சிக்காக மாடுகளை சாலையிலேயே போட்டு வெட்டுகின்றனர். மாடு வெட்டுவதற்கென தனியாக இடம் ஒதுக்கித்தர வேண்டும்.
இந்து அறநிலையத் துறையால் எனது தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. ஒரு கால பூஜைக்கான நிதி எனது தொகுதிக்கு கிடைப்பதில்லை. எனது தொகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும்.பால் உற்பத்தியை பெருக்க, கிராமப்புற கால்நடை மருத்துவமனைகளில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளை வாங்கி வைக்க வேண்டும். மாடுகளுக்கு இன்சூரன்ஸ் பிரீமியத்தை அரசே ஏற்க வேண்டும்.பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவை தொகையை முறையாக வழங்க வேண்டும். கவுண்டன்பாளையம் சாராய கடையை அகற்றியதற்கு அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இ.சி.ஆர். சாலையில் ஹைமாஸ் விளக்கை பராமரிப்பதில்லை. இதனால் குற்றங்கள் நடைபெறுகிறது. ஜீவானந்தபுரம் வாய்க்காலை சீரமைக்க வேண்டும். மேட்டுவாய்க்கால் தூர்வார வேண்டும், ராஜீவ்காந்தி சதுக்கத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது, அங்குள்ள சென்டர் மீடியனில் உள்ள அடைப்பை சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூலை-201810:04:34 IST Report Abuse
Karthik அசோக் ஆணந்த் சர்ச் ஜ ஏன் கேடகவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை