புதுச்சேரி காங்., தலைவருக்கு எதிராக வட்டார தலைவர் தர்ணா போராட்டம்| Dinamalar

புதுச்சேரி காங்., தலைவருக்கு எதிராக வட்டார தலைவர் தர்ணா போராட்டம்

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுச்சேரி:மங்கலம் தொகுதி வட்டார காங்., தலைவர் தனது ஆதரவாளர்களுடன், காங்., கட்சி அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.புதுச்சேரி, மங்கலம் தொகுதி வட்டார காங்., தலைவர் முரளிதரன், பொதுச் செயலாளர் தேவி உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன், நேற்று காங்., அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.போராட்டம் குறித்து அவர் கூறியதாவது:மங்கலம் தொகுதி காங்., கட்சியின் கோட்டையாக நிகழ்ந்தது. காங்., மாநில தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் மங்கலம் தொகுதியை முழுமையாக புறக்கணித்து வருகிறார். அமைச்சர் பதவியில் இருப்பதால், கட்சி வளர்ச்சியில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை.கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் உண்மையான செயல்பாடுகள் குறித்து கட்சியின் மாநில தலைவர் முன்னிலையில் பேசினேன். கட்சியின் உயர் மட்ட குழுவை கூட்ட வேண்டும் என கூறியிருந்தேன். ஆனால், நேற்று முன்தினம் நடந்த கட்சியின் உயர்மட்ட குழுவில் பங்கேற்க எனக்கு அழைப்பு இல்லை. அழைத்து இருந்தால், உண்மை நிலை தெரிந்துவிடுமோ என்ற காரணத்தால் நானும், மங்கலம் தொகுதியின் வட்டார காங்., நிர்வாகிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டுள்ளோம்.இதனை கண்டித்து, காங்., அலுவலகம் முன் போராட்டம் நடத்தினேன். முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். வட்டார காங்., நிர்வாகிகளை அழைத்து, கட்சி தலைமை பேசுவதாக உறுதி அளித்துள்ளார். அதை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்..

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை