பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவு | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை ஆறு மாதத்தில் முடிக்க உத்தரவு

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நிர்மலாதேவி, உயர்நீதிமன்றம், மதுரைகிளை

மதுரை:பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை செப்டம்பர் 24 முதல் ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க விருதுநகர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கல்லுாரி மாணவியரை தவறான பாதைக்கு மொபைல் போனில் அழைத்ததாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி ஏற்கனவே கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் உள்ளார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை கைது செய்தனர். கருப்பசாமியின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைகிளை தள்ளுபடி செய்தது. மேலும் நிர்மலாதேவி வழக்கில் செப்டம்பர் 10 க்குள் சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். செப்டம்பர் 24 முதல் ஆறு மாதத்தில் வழக்கு விசாரணையை விருதுநகர் நீதிமன்றம் முடிக்கவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram - Kuwait,குவைத்
12-ஜூலை-201813:24:02 IST Report Abuse
sundaram எனக்கு ஒரு சந்தேகம். நிர்மலாதேவி மீது என்ன குற்றம் சாட்டப்பட்டுள்ளதோ, அதே குற்றங்களை பிரபல முன்னாள் நடிகர் வணிக ரீதியாக செய்துவருவது அனைவருக்கும் தெரியும். ஒரே ஒரு வித்யாசம், நிர்மலா தேவிக்கு அரசியல் பின்புலம் இல்லை. ஆனால் அந்த முன்னாள் நடிகர் பிரபல அரசியல் கட்சியில் அறுபது லட்சத்து நான்கு பேரில் ஒருவர். அவர் மீது வழக்குகளே வரவில்லையே ஏன்?
Rate this:
Share this comment
mindum vasantham - madurai,இந்தியா
12-ஜூலை-201815:47:25 IST Report Abuse
mindum vasanthamயார் அவர் ஜாடையாக சொல்லவும் , கட்சி திமுகவா ,ஆதிமுகவா...
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
12-ஜூலை-201813:01:20 IST Report Abuse
Needhiyin Pakkam Nil இப்பவே ஆறுமாதத்திற்கு மேலாகிவிட்டது, மீண்டும் முதலிலிருந்து ஆறு மாதமா, ராஜவிசுவாசம்னா இப்படி தான் இருக்கனும்.............
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-ஜூலை-201812:48:56 IST Report Abuse
Pasupathi Subbian விசாரணையை ஜவ்வாக இழுத்துக்கொண்டே போனால் அதற்கு அர்த்தமே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை