Agra youth live---streams sucide | பேஸ்புக் நேரலையில் வாலிபர் தற்கொலை| Dinamalar

பேஸ்புக் நேரலையில் வாலிபர் தற்கொலை

Added : ஜூலை 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பேஸ்புக், வாலிபர், தற்கொலை

ஆக்ரா: ஐந்து முறை முயற்சித்தும் ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்து தற்கொலை செய்து கொண்டார். இதனை 2,750 பேர் பார்த்த போதும், போலீசுக்கு தகவல் அளிக்கவில்லை.

உ.பி., மாநிலம், நியூ ஆக்ரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாந்தி நகரை சேர்ந்தவர் முன்னா குமார் (24). பி.எஸ்.சி., பட்டதாரியான இவர் ராணுவத்தில் சேர ஐந்து முறை முயற்சி செய்தார். அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனால், விரகதியடைந்த அவர், பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 1:09 நிமிடங்கள் ஒளிபரப்பான அந்த வீடியோவை 2,750 பேர் பார்த்த போதும், இது குறித்து போலீசையோ முன்னா குமாரின் குடும்பத்தினரையோ உஷார்படுத்தவில்லை. தனது தற்கொலை குறித்து வாலிபர், 6 பக்க கடிதம் எழுதிவைத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை