ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி: அமைச்சர் ஜெயக்குமார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி: அமைச்சர் ஜெயக்குமார்

Updated : ஜூலை 12, 2018 | Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஸ்டாலின் ,அமைச்சர் ஜெயக்குமார், கச்சத்தீவு பிரச்னை, திமுக ஆட்சி,  மீனவர் பிரச்னை,  சிஏஜி அறிக்கை,  சிலை கடத்தல் வழக்கு, 
Jayakumar, Minister Jayakumar, Katchatheevu problem, DMK regime, fisherman problem, CAG report, Stalin, statue abduction case, ஜெயக்குமார்,

சென்னை: மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோட்டு ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கின்றனர் என சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:வரி ஏய்ப்பு சோதனை தான் முட்டை நிறுவனத்தில் நடந்துள்ளது. இது வருமானவரி நடவடிக்கை. மொட்டைக்கும் முழங்காலும் முடிச்சுபோட்டு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த நினைக்கின்றனர்.

கச்சத்தீவு தி.மு.க., ஆட்சியில் தான் தாரை வார்க்கப்பட்டது. மீனவர் பிரச்னைக்கு கச்சத்தீவு மீட்பு தான் தீர்வு என கருதிய ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நடந்து வருகிறது. சி.ஏ.ஜி. அறிக்கையை வைத்து ஸ்டாலின் பேசுகிறார். இது போல அவர்களது ஆட்சியில் ஏராளமான சி.ஏ.ஜி. அறிக்கை உள்ளன. மீனவர்கள், படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிலை கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தகுந்த பதில் அளிப்போம். கோயில் சொத்துகள் கொள்ளை, சிலை கடத்தலை தடுக்க ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அதுபோல நடக்கிறோம், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-ஜூலை-201811:19:26 IST Report Abuse
Panneerselvam Chinnasamy மொட்டைக்கும் முழங்காலுக்கும் அல்ல முட்டைக்கும் அரசுக்கும் முடிச்சு போடுகிறார்கள் ... சரி சரி... எத்தனை முடிச்சுக்களை அவிழ்த்திருக்கிறீர்கள்... குட்கா... சேகர் ரெட்டி ... இப்படி .. முடிச்சி அவிக்கறதில்தான் நீங்கள் தான் கெட்டிக்காரர்களாயிற்றே... இது என்ன பெரிய பிரமாதம்..
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
13-ஜூலை-201810:42:28 IST Report Abuse
மணிமாறன் ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......முழங்கால் யாரோடது வேணா இருக்கட்டும்..ஆனால்..மொட்டை தலை யாரோடது....
Rate this:
Share this comment
Cancel
அறிவுடை நம்பி - chennai,இந்தியா
13-ஜூலை-201810:40:48 IST Report Abuse
அறிவுடை நம்பி அது மொட்டை தலை இல்லை...முட்டை தலை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை