போலீசாருக்கு விடுமுறை: பதிலளிக்க உத்தரவு | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு விடுமுறை: பதிலளிக்க உத்தரவு

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை உயர்நீதிமன்றம்,  நீதிபதி கிருபாகரன், தமிழக அரசு ,நீதிமன்றம், போலீஸ், வார விடுமுறை, சென்னை, Chennai High Court, Judge Kripakaran, Tamilnadu Government, Court, Police, Weekend, Chennai,

சென்னை:போலீசாருக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதனை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.
அப்போது, போலீசார் வார விடுமுறை என்பது ஆவணங்களில் மட்டுமே உள்ளது. நடைமுறைப்படுத்த வேண்டும். போலீசாரும் விடுமுறையை குடும்பத்தினருடன் செலவிட வேண்டும். வார விடுமுறை என்பது அவசியம். இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை ஜூலை 19 க்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூலை-201820:46:42 IST Report Abuse
ஸாயிப்ரியா போலீஸாரும் விடுமுறை பெற்றால் குடும்பத்தினருடன் ரிலாக்ஸாக டென்ஷன் இல்லாமல் இருப்பர்
Rate this:
Share this comment
Cancel
12-ஜூலை-201820:03:33 IST Report Abuse
சிவம் காவல் துறையில் பணிபுரியும் அனைவரும் எவ்வளவு மன அழுத்தத்தில் தங்கள் கடமைகளை செய்கிறார்கள் தெரியுமா. என்னுடைய ஒரு போலீஸ் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வரும்போது நேரம் இரவு 10. அடுத்தநாள் ஓரு திருமணத்திற்கு குடும்பத்துடன் வெளியூர் செல்ல இருந்தனர். குடும்பமே மகிழ்ச்சியுடன் இருந்தனர். 11 மணிக்கு போன் வருகிறது. உடனே எங்கேயோ டூட்டி என்று. மறுக்கமுடியாது. அதனால் அவர்கள் பயணமே ரத்தானது. இது தான் போலீசின் நிலைமை. கிடைத்ததை சாப்பிட்டு, கொசுகடியில் உறங்கி மீண்டும் டூட்டி..... யாரை காக்க. மக்களை பாதுக்காக்கதான். இவர்களுக்கு பரிந்து பேசுவோர் யாரும் கிடையாது. மறைந்த சோ அவர்கள் கூறியது போல் காவல் துறை ஊழியர்கள் அனைவருக்கும், மற்ற அரசு ஊழியர்கள் சம்பளம் போன்று அல்லாமல் மூன்று மடங்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். தவிர அவர்கள் குடும்ப தேவை அனைத்திர்க்கும் சிறப்பு சலுகை வழங்கப்பட வேண்டும். கட்டாய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். ஊழியர்கள் அதிகப்படுத்த படவேண்டும். வாழ்க தமிழக காவல்துறை. வளர்க அவர்கள் பணி...
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
12-ஜூலை-201819:06:20 IST Report Abuse
r.sundaram வி ஐ பி பாதுகாப்பு பணியில் இருந்து போலீஸ்காரர்களை விடுவித்தாலே மாற்று வேலைகளுக்கு தேவையான போலீசார் கிடைப்பார்கள். வி ஐ பி பாதுகாப்பு பணிக்கு வேண்டுமானால் தனியாக ஒரு பிரிவு ஆரம்பிக்கட்டும். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம், இந்த வேலைக்கு குறைந்த சம்பளத்துக்கு நிச்சயமா ஆட்கள் கிடைப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை