சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
விதிமீறல் கட்டடங்கள்,சி.எம்.டி.ஏ.,ஐகோர்ட்

சென்னை : விதிமீறல் கட்டடங்களை தடுக்கத்தவறிய சென்னை சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக்கூடாது என ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் விதிகளை மீறி தேவாலயம் கட்டப்பட்டதாக ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையில், நீதிபதி கிருபாகரன் தெரிவித்தததாவது: 2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து அதிகாரிகள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. விதிமீறல் கட்டடங்களை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. ஆக்கிரமிப்பாளர்களிடம் அதிகாரிகள் பணம் பெறுவதால் விதிமீறல் கட்டடங்கள் அதிகரிக்கின்றன, எனக் கூறினார்.

மேலும் நேற்று பெய்த ஒரு மழைக்கே சென்னை மிதந்தது வேதனை அளிக்கிறது எனத் தெரிவித்த நீதிபதி, ஜூலை 16ம் தேதி நேரில் ஆஜராகி மாநகராட்சி ஆணையர் உட்பட 3 பேர் பதில் தர உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
12-ஜூலை-201821:38:38 IST Report Abuse
Adhvikaa Adhvikaa சி எம் டி வை ஏன் கலைக்கக் கூடாது என்று மாண்புமிகு உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. சி எம் டி ஏ சரியாக செயல்படவில்லை என்று சொல்லி அதனை கலைப்பது நியாயம் தான். ஆனால் அதனை கலைத்து விட்டு, மறுபடியும் அதன் பணிகளை கவனிக்க வேறு ஒரு அமைப்பினை ஏற்படுத்தியே தீரவேண்டும். அப்படி ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்படும் போது, அந்த அமைப்பு அரசு கட்டுப்பாட்டில் இருந்தால், மேலும் ஊழல்கள் மட்டுமே வளரும். எனவே சி எம் டி ஏ போன்ற அமைப்பை அரசிடம் இருந்து விடுவித்து, தனியார் வசம் ஒப்படைத்தால் தான் , அது சிறிதாவது சிறப்பாக செயல்படும். இல்லையென்றால் ஒரு பயனும் இல்லை. தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டிற்கு பிறகு , அரசு என்ன செய்தாலும் அந்த வேலைகள் மூன்றில் ஒரு பங்கு தான் ஒழுங்காக நடக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு ஒரே ஊழல் கொள்ளை தான். எனவே அரசு காவல், நீதி, வருவாய் ஆகிய மூன்று துறைகளை மட்டும் வைத்துக்கொண்டு , எஞ்சிய துறைகளை தனியாரிடம் ஒப்படைப்பது நாட்டுக்கு மிக மிக நல்லது.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-201821:24:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //ஜூலை 16ம் தேதி நேரில் ஆஜராகி மாநகராட்சி ஆணையர் உட்பட 3 பேர் பதில் தர உத்தரவிட்டுள்ளார்.// தகுந்த ஆய்வுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் சொன்னதன் பேரில் வழக்கு "முடிக்கபட்டது".. இது தான் காலகாலமாக நடக்கும் "நீதிமன்ற நடவ(வே)டிக்கை".. இந்த கருமாந்திரத்துக்கு ஒரு நீதிமன்றம் தேவையா? கலைத்துவிட்டு போகலாம்.
Rate this:
Share this comment
Cancel
12-ஜூலை-201821:16:45 IST Report Abuse
வை. நாராயணன். நீதிபதி ஐயா... மிகச் சரியாகத் தான் கேட்டீங்க. ஆமாம் சி.எம்.டி.ஏ. எதுக்கு? எங்களுக்கும் தான் புரியல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை