சசி தரூரை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்: சுப்பிரமணியன் சாமி| Dinamalar

சசி தரூரை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்: சுப்பிரமணியன் சாமி

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Subramanian swamy,சுப்பிரமணியன் சாமி,பா.ஜ,
சசி தரூர்

புதுடில்லி : சசிதரூர் கூறிய 'ஹிந்து பாகிஸ்தான்' கருத்துக்கு அவரை மனநல மருத்துவமனையில் தான் சேர்க்க வேண்டும் என பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் பேசுகையில், 2019 பார்லி., தேர்தலில் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் இந்திய நாடு, 'ஹிந்து பாகிஸ்தான்' என மாறிவிடும் என கூறியிருந்தார். அவரது இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இக்கருத்து குறித்து சசிதரூரை, பா.ஜ., தலைவர் சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது: சசி தரூர் மீது பிரதமர் மோடி இரக்கம் காட்ட வேண்டும். சசி தரூருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது; அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அவர் அளவுக்கு அதிகமாக எதையோ சாப்பிட்டு விட்டார் போல. அவரது பேச்சு மற்றும் கருத்துகள் ஏமாற்றத்தின் வெளிப்பாடுகள்.

ஹிந்து பாகிஸ்தான் என்பதற்கு என்ன அர்த்தம்? அவர் பாக்.,கிற்கு எதிரானவரா? பாக்.,கில் அவருக்கு நிறைய பெண் தோழிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாக்., ஐ.எஸ்., அமைப்பின் உளவாளிகள் என குற்றம் சாட்டினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அப்பாவி - coimbatore,இந்தியா
13-ஜூலை-201808:20:20 IST Report Abuse
அப்பாவி உம்மை முதலிலேயே அங்கே அனுப்பி இருக்கவேண்டும்
Rate this:
Share this comment
Vel - ,
13-ஜூலை-201814:15:48 IST Report Abuse
Velசசியை வரவேற்கவா?...
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
13-ஜூலை-201808:11:33 IST Report Abuse
Kailash பாம்பின் கால் பாம்பறியும்....
Rate this:
Share this comment
Vel - ,
13-ஜூலை-201814:17:47 IST Report Abuse
Velபாம்புக்கு கால் ஏது?...
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
13-ஜூலை-201806:02:19 IST Report Abuse
krishnan நாகூர் தர்காவுக்கு இவரை அனுப்பவேண்டும்.
Rate this:
Share this comment
vel - ,
13-ஜூலை-201809:13:32 IST Report Abuse
velஅனுபவமோ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை